பாணிக் கடும்பு





Karamellpudding   பாணிக் கடும்பு 

தேவையான பொருட்கள் :     
:

2 டெலீ சீனி (பாணிக்கு)
6 டெலீ பால் (hel mælk)
3 டெலீ தலைப்பால் (fløde)
5 மேக சீனி 
1 வனிலாத்தண்டு 
8 முட்டை 


செய்முறை

1) 2 டெலீ சீனியை ஒரு (nonstick ) சட்டியிலிட்டு மிதமான வெப்பத்தில் உருக்கவும்.
     பொன்னிறம் ஆனதும் பாணியை ஒரு பாண் பெட்டியில் ஊற்றி சுழாவவும். 
      பாணி கூடியவரையில் பாண் பெட்டியில் பிரள வேண்டும்.













2) வனிலாத்தண்டினை இரண்டாகக் கீறி உள்ளுடனை வழுந்தி எடுத்து ஒரு சட்டியில் இடவும்.
    அதே சட்டியில் பால், தலைப்பால், சீனி எல்லாவற்றையும் கலந்து ஒரு கொதி கிளம்பும்வரை     
    காய்ச்சவும். இறக்கி வைத்து புறங்கையில் சுடும்பதம் வரை ஆற வைக்கவும்.


3) முட்டைகளை இலேசாக அடித்து பாற்கலவையில் கலந்து காற்றுக்குமிழ்களை 
    போக்காட்டுவதற்காக சிலநிமிடங்கள் ஓய்வாக வைக்கவும். 




4) பின் பால்வடி கொண்டு வடித்து பாண் பெட்டியில் ஊற்றவும் 
     


5) பாண் பெட்டியை 1/3 பங்கு உயரத்துக்கு நீர் கொண்ட பெரியதட்டில் வைத்து வெதுப்பு அடுப்பின் 
    கீழ்க் கடைசி மட்டத்தில் வைத்து 120 பாகை வெப்பத்தில் 2 மணிநேரம் வேக வைக்கவும்.

6) சாதுவாகப் பொன்னிறம் காட்டும் தருணத்தில் வெளியே எடுத்து ஒரு இரவு முழுக்க ஆற வைக்கவும். 
     காலையில் எடுத்துக் குளிர்பெட்டியில் வைக்கலாம்.

7) பரிமாறும் முன்னர் பாண் பெட்டியின் 4 பக்கமும் ஒரு கூரிய கத்தியால் கீறிவிட்டு பாண் பெட்டியை
    விடச் சற்றே பெரிய தட்டை அதன் மேல் கவிழ்த்து வைக்கவும். பின்  பாண் பெட்டியையும் மூடி வைத்த     தட்டையும் "அவுக்" கென்று திருப்பவும். ஆறுதலாகத் திருப்பினால் பாணி கீழே ஊற்றுப்படும்.

8) திரள அடித்த தலைப்பாலை (fløde) பிதுக்கி விட்டு அலங்கரித்து, பரிமாறவும்.

Ekte karamellpudding - Her er en enkel oppskrift på ekte karamellpudding. Det er veldig populært tli jul, men kan absolutt spises året rundt!


9) முயற்சி திருவினையாக்கும்! வெற்றி உங்களுக்கே!









Kommentarer